விஜய் டிவி குறித்து அதிர்ச்சி தகவலை கூறிய நாஞ்சில் விஜயன்
விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபல்யமடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். எத்தனையோ கலைஞர்களை உருவாக்கிய பெறுமை விஜய் டிவியை சேரும்.
ஆனால், தற்போது விஜய் டிவி மூலமாக முன்னேறிய ஒருவர் விஜய் டிவி பற்றி பேசியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமானார்.
தற்போது நாஞ்சில் விஜயன் விஜய் டிவி மீது ஒரு குற்றச்சாட்டை கூறி அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நாஞ்சில் விஜயன் தனது கைப்பட எழுதிய அந்த கடிதத்தில்,
“ஹலோ மிஸ்டர் விஜய் டிவி சமூக வலைதள அட்மின், நான் கடந்த 15 வருடமாக விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறேன். யாரும் போடாத தயங்கக்கூடிய பெண் வேடத்தையும் நான் துணிச்சலாக போட்டு மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறேன்.

நம் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய சில கலைஞர்களுக்கு கடந்த வாரம் பிறந்தநாள் வாழ்த்துக்களை நம்முடைய விஜய் தொலைக்காட்சி சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்தீர்கள். அதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை, அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் கூட.
ஆனால், என்னுடைய பிறந்தநாள் கடந்த வாரம், எனக்கு ஒரு வாழ்த்து நீங்கள் கூறவில்லை. அது ஏன் மறந்து விட்டீர்களா? இல்லை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டீர்களா? அந்த காலத்தில் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து உயர்ந்த உயர் ஜாதி… கீழ் ஜாதி என்று பிரித்தார்கள்.
இப்பொழுது நீங்கள் செய்வது கிட்டத்தட்ட அதுபோலத்தான் இருக்கிறது. தொலைக்காட்சியில் உச்சப் புகழ்பெற்ற கலைஞர்களை உயர் ஜாதியாகவும், என்னை போல ஒரு அங்கீகாரம் கிடைக்காதா போராடிக் கொண்டிருக்கும் கலைஞர்களை கீழ் ஜாதியாகவும் நீங்கள் பார்க்கிறீர்களோ என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.
மேலும் இந்த நிகழ்வு விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். ஏனென்றால், இப்படிப்பட்ட முடிவுகளை விஜய் டிவி சமூக வலைதளத்தை பார்க்க கூடிய அட்மின் தான் முடிவு செய்வார்கள் மற்ற அதிகாரிகளுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு.
இது எல்லாம் ஒரு விஷயமா கடந்து போ நாஞ்சில் விஜயன் என்று சொல்பவர்களுக்கு, நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இப்படித்தான் பல வருடங்களில் நாம் உரிமைகளை நாம் பெற மறுக்கிறோம். நம் உரிமையை நாம் தான் கேட்டு வாங்க வேண்டும் என நாஞ்சில் விஜயன் குறிப்பிட்டுள்ளார்.






