பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் பிரம்மாண்டத்தின் 5ம் திகதி தொடங்கப்பட்டது.
இதற்கு முன் வந்த சீசன்களை விட இந்த சீசன் ஆரம்பமே அதிரடியாக உள்ளது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு ஒருவர் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது யார் என்று பார்ப்போம். பிக்பாஸ் வந்த 5வது நாளிலேயே தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை எனக்கூறி ஆர்.ஜே.நந்தினி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
யாரிடம் கோபத்தை காட்டுவது என தெரியாமல் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களையும் மோசமாக திட்டியுள்ளார், யார் வந்தாலும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.
அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பது தெரிய பிக்பாஸ் அழைத்து பேசினார். ஆனால் நந்தினி பேசியதை கேட்ட பிக்பாஸே அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
நந்தினி பிக்பாஸில் கலந்துகொள்ள ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு 5 நாட்களுக்கு ரூ. 50 ஆயிரத்துடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது.