ரன்வீர் – யாஷ் கலக்கும் ராமாயணா படத்தின் அறிமுக விடியோ வெளியானது…

ரன்பீர் கபூர் இராமனாகவும், யஷ் இராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் ராமாயணா முதல் பாகத்தின் 3 நிமிடங்கள் கொண்ட அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.
நமீதா மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை நிதிஷ் திவாரி இயக்கியுள்ளார்.
இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்தின் 7 நிமிட மற்றுமொரு க்ளிம்ஸ் விடியோ சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)