பொழுதுபோக்கு

நாக சைதன்யா – சோபிதா திருமணம் குறித்து நாகர்ஜுனா பகிர்ந்த தகவல்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, தனது மகன் நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமணம் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் ஆடம்பரமான இந்திய திருமணத்தை விரும்பவில்லை என்றும், இப்போது அனைத்தும் அவர்களின் விருப்பப்படியே திட்டமிடப்பட்டு வருவதாக நாகர்ஜுனா தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார்.

“சைதன்யாவும் சோபிதாவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். எனவே இதற்கான ஏற்பாடுகளை அவர்களிடமே விட்டுவிடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் அதை தங்கள் வழியில் செய்ய விரும்பினர். உண்மையாகவே இந்த வார்த்தை எனக்கு நிம்மதியை கொடுத்தது. தயவுசெய்து செய்யுங்கள் என்று கூறிவிட்டேன்.

சோபிதாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு கொடுக்கும் ஒத்துழைப்பு பற்றி கூறிய நாகர்ஜுனா, “என் மகன் திருமணத்தில், பாரம்பரிய திருமண சடங்குகள் மற்றும் புனித மந்திரங்களின் இடம்பெற வேண்டும் என்பதை நான் விரும்பினேன். “சோபிதாவின் பெற்றோரும், இது போன்ற முறைகளை சேர்க்க விரும்புவதில் தெளிவாக இருந்தனர்.

என்னை பொறுத்தவரையில், மந்திரங்களும் சடங்குகளும் மிகவும் இனிமையானவை – அவை அமைதியைத் தருகின்றன. இது ஒரு அழகான திருமணமாக இருக்கும், எளிமையானதாகவும், மனதிற்கு இதமானதாகவும் இருக்கும், இந்த ஜோடியைப் போலவே.” என கூறியுள்ளார்.

இந்த ஜோடி டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் நிலையில், குடும்பத்தினருக்கு நெருங்கிய பிரபலங்கள் மட்டுமே அழைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் பரிசுகளுடன் கூடிய இவர்களின் திருமண பத்திரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் சோபிதா தனது திருமண நாளில் தன்னை அலங்கரிக்க உள்ள சேலையை தயாரிக்கும் பணியை எந்த ஒரு முக்கிய ஸ்டைலிஸ்ட்டுக்கும் கொடுக்காமல், காஞ்சிபுரம் பட்டு சேலை மற்றும் மற்றொரு கதர் சேலை ஆகியவற்றை அணிய உள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 18 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்