மகனின் திருமணத்தை புறக்கணித்தாரா நாகர்ஜுனாவின் முதல் மனைவி?
நடிகர் நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. லட்சுமியை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார் நாகார்ஜுனா.
லட்சுமியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். இவரது தந்தை ராமநாயுடு சுரேஷ் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷின் உடன் பிறந்த சகோதரி தான் லட்சுமி.
பாகுபலி நாயகன் ராணா டகுபதியும் லட்சுமிக்கு சொந்தம் தான். ராணாவின் அத்தை தான் இந்த லட்சுமி. நாகார்ஜுனாவை விவாகரத்து செய்த பின்னர் ஷரத் விஜயராகவன் என்கிற தொழிலதிபரை மறுமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் லட்சுமி.
அமெரிக்காவில் லட்சுமி இண்டீரியர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்ததில் தன் இரண்டாவது கணவருடன் வந்து கலந்துகொண்ட லட்சுமி, தன் மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்கிற தகவல் பரவலாக பரவியது. இதுதொடர்பாக இந்தியா டாட்காம் என்கிற செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டு இருந்தது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் மகனின் திருமணத்தையே புறக்கணித்துவிட்டாரா.. அவருக்கு மகனுக்கும் இடையே ஏதேனும் சண்டையா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் நாம் இதுகுறித்த உண்மையை ஆராய்ந்து பார்த்ததில், லட்சுமி தன் மகனின் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
அவரோடு அவரது இரண்டாவது கணவர் ஷரத்தும் பங்கேற்றிருக்கிறார். இதன்மூலம் லட்சுமி தன் மகனின் இரண்டாவது திருமணத்தை புறக்கணித்தார் என்கிற தகவல் துளியும் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.