உலகம்

அல்ஜீரியாவில் 26 ஆண்டுகளுக்கு முன் மாயமான இளைஞன் – குடும்பத்திற்கு காத்திருந்த ஆச்சரியம்

அல்ஜீரியா நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஒருவர் அயல் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஒமர் என்பவர் 1998ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது காணாமல்போயுள்ளார்.

அப்போது அவருக்கு 19 வயதாக காணப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தார் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

தற்போது சுமார் 45 வயதாகும் ஒமர், தமது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பக்கத்து வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 61 வயது நபர் தப்ப முயன்றதாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நீதி அமைச்சு தெரிவித்தது.

சொத்துப் பிரச்சினையால் கடத்தியவரின் சகோதரர் சமூக ஊடகத்தில் கடத்தல் குறித்து தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

தம் மீது மந்திரம் செலுத்தப்பட்டதால் உதவி கேட்க முடியவில்லை என்று ஒமர் கூறியதாக அல்ஜீரிய ஊடகங்கள் கூறின. ஒமருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்