முக்கிய செய்திகள்

மீண்டும் தாயகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா யானை!

சக் சுரின் என அழைக்கப்படும் முத்துராஜா யானையை கொண்டு செல்லும் விமானம், சற்று முன்னர் தாய்லாந்தின் பெங்காக் நகரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தினால், இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்ட யானையே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த யானையை அழைத்துச் செல்வதற்காக, ரஷ்யாவுக்கு சொந்தமான இழுசியன் ரக சரக்கு போக்குவரத்து விமானம் இலங்கைக்கு வந்திருந்தது.

விசேடமாக தயாரிக்கப்பட்ட கூண்டில் ஏற்றப்பட்ட சக் சுரின் யானை இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இன்று அதிகாலை 4.30 அளவில் யானை அடங்கிய கூண்டை விமானத்தில் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில், உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள,நிலையில் குறித்த யானையை மீண்டும் தங்களது நாட்டுக்கு அழைத்து செல்ல தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

(Visited 29 times, 1 visits today)

SR

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்