“முத்தமழை” பாடல் வீடியோ வெளியானது… நல்ல வேளை பாட்ட படத்துல வைக்கல

“தக் லைஃப்” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் “முத்தமழை” பாடலை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அப்பாடல் திரைப்படத்தில் இடம்பெறவே இல்லை.
இந்த நிலையில் பாடகி தீ பாடிய “முத்தமழை” பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மேடையில் பலரின் முன்னிலையில் திரிஷா இப்பாடலை பாடுவது போல் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாடகி தீயின் குரல் திரிஷாவுக்கு பொருந்தவே இல்லை என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “நல்லவேளை இப்பாடலை படத்தில் வைக்கவில்லை” என்றும் விமர்சித்து வருகின்றனர்.
அதே போல் பலரும் சின்மயியின் குரல்தான் திரிஷாவுக்கு பொருத்தமாக இருக்கும் எனவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
(Visited 38 times, 1 visits today)