அரசியலில் விருப்பமில்லை… ஆபத்துக்கள் அதிகமாக இருப்பதாக முடிவை மாற்றிய மஸ்க்

அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருந்ததால் வேறு வழியே இல்லாமல், எனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் அரசியல் கட்சியைத் தொடங்குவதாக ஜூலை முதல் வாரத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க்,
எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ராக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன். ஆனால், தேர்தல் பிரசார வசனங்களை அல்ல.
என் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது.
நாட்டின் எதிர்காலத்துக்கு மோசமான ஆபத்துகள் காத்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி, அரசியல் கட்சித் தொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன் என்று பேசியருக்கிறார்.