கவினின் படத்தில் இருந்து விலகிய அனிருத்… காரணம் இதுதானா?
நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நாயகனாக நடித்து வந்த கிஸ் திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகி உள்ளாராம்.
டாப் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் இசையமைக்காமல் கவின் போன்ற இளம் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் கவின் நடிப்பில் உருவாகும் 2 படங்களுக்கும் இசையமைக்க கமிட்டாகி இருந்தார் அனிருத்.
அதில் ஒன்று ஹாய். இப்படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இதுதவிர கவினின் மற்றொரு படமான கிஸ் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அப்படத்தில் இருந்து அனிருத் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனிருத் தற்போது ஒரு படத்திற்கு ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். ஆனால் கிஸ் படத்தின் மொத்த பட்ஜெட்டே மிகவும் கம்மி தானாம். கேட்ட சம்பளம் கிடைக்காததால் அனிருத் அப்படத்தில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதில் வேறு ஒரு இசையமைப்பாளர் இசையமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.