இலங்கை

முல்லைத்தீவின் முத்துஐயன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்து ஐயன்கட்டு குள்ளத்திற்கான நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில் குளத்தின் நான்கு நான் கதவுகள் இன்று (16.12) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

24 அடி கொள்ளளவு கொண்ட முத்துஐயன்கட்டுக்குளத்தில் 23 அடி 3 அங்குல நீர்மட்டம் காணப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு அங்குலத்துக்கும் இரண்டு வான் கதவுகள் மூன்று அங்குலத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன.

முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் மஞ்சுளா ஜொய்ஸ்குமார் அழைப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமா மகேஸ்வரன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன் ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் றமேஸ் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு நான் கதவுகளை திறந்து வைத்தனர்

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் காணப்படுவதாகவும் அனைத்து குளங்களும் அதன் உச்ச கொள்ளளவை அடைந்துள்ளதாகவும் எனவே தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்தார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!