சென்னை ஸ்டார் ஹோட்டலில் சிக்கிய இசையமைப்பாளரின் மகள்

சென்னை கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் செயல்பட்டு வரும் பப்பில் அன்று இரவு கஞ்சா பார்ட்டி நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிசார் அங்கிருந்த அறைகளில் சோதனையிட்டபோது அங்கு ஒருவரும் இல்லை.
பின் பப்புக்கு வந்தவர்கள் அருகிலுள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றுள்ளனர்.
அங்கு 3 பெண்கள் உட்பட 18 பேரையும் போலிசார் சுற்றி வளைத்து விசாரித்ததில், எல்லோரும் பப்பில் நடந்த பார்ட்டியில் பங்கேற்று, மெத்தபெட்டமைன், கஞ்சா பயன்படுத்தியதும் உறுதி செய்து 18 பேரையும் கைது செய்துள்ளனர்.
அவர்களின் 3 கார்கள், 2 பைக், 18 செல்போன்கள், கஞ்சா போதைப்பொருட்கள் என்பவற்றை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் 15 இளைஞர்கள் உட்பட 3 இளம்பெண்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் வாட்ஸ் அப் குரூப்பில் நண்பர்களாக இருப்பவர்களாம்.
இவர்களில், அனந்தபுரத்து வீடு படத்தின் இசையமைப்பாளரின் 23 வயதான மகள் தான் பார்ட்டியை வைத்துள்ளார்.
இவர்களுக்கு யார் கஞ்சா, பெத்தபெட்டமின் சப்ளை செய்தது என்று ஹோட்டல் மேனேஜர், பார்ட்டி வைத்த இசையமைப்பாளரின் மகளிடம் விசாரணையை போலிசார் நடத்தி வருகிறார்கள்.