ஆசியா செய்தி

13 மாதங்களில் இஸ்ரேல் – லெபனான் மோதலில் 3000க்கும் மேற்பட்டோர் பலி

இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு அவ்வப்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் 1ந்தேதியில் இருந்து அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதலும் நடத்தி வருகிறது.

இதனால் கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல்- லெபனான் சண்டையில் லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையிலான சண்டை முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக இஸ்ரேல் – காசா, ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை.

இஸ்ரேலின் வான்தாக்குதலில் இருந்து தப்பிக்க 1.2 மக்கள் லெபனானில் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

உச்சக்கட்டமாக கடந்த செப்டம்பர் 23ந்தேதி தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் இஸ்ரேல் பயங்கரமாக வான்தாக்குதலை நடத்தியது இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 90 பேர் காயம் அடைந்தனர் எனவும் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 32 ராணுவ வீரர்கள் அடங்குவர். 60 ஆயிரம் மக்கள் இஸ்ரேல் வடக்கு எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!