லிபியா வெள்ளத்தில் 10000க்கும் அதிகமானோர் காணவில்லை – ஐ.நா
லிபியாவின் கிழக்கு நகரமான டெர்னாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் 10,100 பேர் இன்னும் பேரழிவிற்குள்ளான நகரத்தில் காணாமல் போயுள்ளனர் என்று மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் செஞ்சிலுவைச் சங்கத்தின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி தெரிவித்துள்ளது.
“தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க அயராது உழைத்து வருவதால் இந்த புள்ளிவிவரங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
டேனியல் புயல் வடகிழக்கு லிபியாவைத் தாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு, “டெர்னாவில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
கடுமையான குடிநீர் பிரச்சனைகள் நகரத்தை வாட்டி வதைத்துள்ளன, குறைந்தது 55 குழந்தைகள் அசுத்தமான நீரைக் குடிப்பதால் சுகையினமுற்றுள்ளனர்.