இலங்கை

அதிகளவில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள்!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து முப்பத்து ஒன்பது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மூன்று வருடங்களுக்குப் பின்னர், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஜூலை மாதத்தில் வருகை தந்துள்ளனர்.

இது கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வருகை தந்த பயணிகளை விட 202 சத வீத அதிகரிப்பாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் 7 லட்சத்து 67 ஆயிரத்து 913 பேர் வருகை தந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சராசரியாக நாளாந்தம் 180 அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டளவில் நாளாந்தம் சராசரியாக 500 அமெரிக்க டொலர்களை செலவிடுவர் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
(Visited 7 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content