இலங்கையில் பூஜையுடன் தொடங்கிய மோகன்லால் – மம்முட்டியின் படப்பிடிப்பு: வைரலாகும் வீடியோ

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாகிய மோகன்லால் மற்றும் மம்முட்டி. இருவரும் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.
மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பமானது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஐதராபாத், டெல்லி மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 150 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
இந்தப் படத்தை ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
(Visited 12 times, 1 visits today)