முக்கிய செய்திகள்

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து: ரிஷியின் தலைமைத்துவத்திற்கும் பாராட்டு

பிரித்தானிய தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்ற தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் கட்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் இந்தியா – இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்களின் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்” என குறிப்பிட்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்ற கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்து தெரிவித்துளளார்.

இதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்த கட்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக்கின் தலைமைத்துவத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

“இங்கிலாந்தின் போற்றத்தக்க தலைமைத்துவத்திற்கும், உங்கள் பதவிக்காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்களின் தீவிர பங்களிப்புக்கும் நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்
error: Content is protected !!