பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லும் அகதிகளை கண்காணிக்க நவீன கருவிகள்

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லும் அகதிகளை கண்காணிக்க நவீன கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிறிய படகுகளில் கடல்மார்க்கமாக பிரித்தானியாவுக்குச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த பயணங்களை தடுப்பதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டிருந்தது.
அகதிகள் வருகையால் பெரிதும் பாதிக்கப்படும் பிரித்தானியா, 500 மில்லியன் யூரோக்களை பிரான்சுக்கு வழங்கியிருந்தது. அத்துடன் பல நவீன கருவிகளையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தது.
வான்வழி கண்காணிப்பு கருவிகள் விரைவில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)