வற் வரி இல்லாத் பொருட்களை விற்பனை செய்ய விசேட கடைகளை ஆரம்பிக்க அமைச்சர் திட்டம்
வற் இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்ச்சித் தொடரில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தமது அமைச்சின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் இயங்கக்கூடிய பல இடங்கள் உள்ளதால், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, போட்டி மற்றும் நியாயமான வர்த்தகத்தில் ஈடுபடத் தயாராக இருக்கும் மக்களுக்காக காய்கறிகள், அரிசி, குழந்தை பால் பவுடர் போன்ற வற் அல்லாத பொருட்களுக்கான கடைகளின் வலையமைப்பை நாடு முழுவதும் நிறுவ தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.