இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் புத்தளம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)