பேஸ்புக், வட்ஸ்அப்பை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் மெட்டா
மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் பேஸ்புக் (Facebook) தொடர்பாகப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பயனர்கள் தங்கள் சுயவிவரத்தை (Profile) பேஸ்புக் சுயவிவரத்துடன் நேரடியாக இணைக்கும் புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதி, சமூக ஊடக இணைப்பை எளிதாக்கும் ஒரு முயற்சியாகும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் iOS பீட்டா பதிப்புகளில் (2.25.29.16) இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலம், பயனர்கள் தங்கள் பேஸ்புக் கணக்கின் URLஐ வாட்ஸ்அப் சுயவிவரச் செட்டிங்ஸில் சேர்க்க முடியும். இணைக்கப்பட்ட லிங்க், மற்றவர்களுக்கு தொடர்பு விவரங்கள் பிரிவில் காட்டப்படும்.
இந்த அம்சத்தில் தனியுரிமைக் கட்டுப்பாடு (Privacy Control) வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பேஸ்புக் லிங்கை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைப் பயனர்களே தேர்வு செய்துகொள்ள முடியும். இந்த அம்சத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் பயனரின் விருப்பம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
பயனர்கள் தங்கள் பேஸ்புக் லிங்கை உறுதிப்படுத்தாமல் வைத்திருக்கலாம் அல்லது மெட்டாவின் அக்கவுன்ட்ஸ் சென்டர் மூலம் அதனை உறுதி செய்யலாம்.
இந்த அம்சம் விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.





