நாகர்ஜுனா வீட்டு வாரிசை திருமணம் செய்ய போகும் மீனாட்சி சவுத்திரி?
நாகர்ஜூனாவின் மருமகன் சுஷாந்த் அனுமோலு பிரபல இளம் நடிகை மீனாட்சி சவுத்திரியை காதலித்து வருகிறாராம்.
ஹரியானாவை சேர்ந்த நடிகை மீனாட்சி சவுத்ரி, ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தவர். அதே போல் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 போட்டியிலும் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய இவருக்கு, ஹிந்தி மற்றும் தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தது.
தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே தமிழில் 2023 ஆம் ஆண்டு வெளியான, விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தில் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, இதை தொடர்ந்து ஆர்.ஜெ.பாலாஜிக்கு ஜோடியாக ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தில் நடித்தார்.
அதே போல் தளபதி விஜய் நடித்து வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில், தளபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தென்னிந்திய திரை உலகில் மிகக் குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்துள்ள மீனாட்சி சவுத்ரி, கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளது தான் தற்போது தெலுங்கு திரையுலகில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
அதாவது நாகார்ஜுனாவின் மருமகன் சுஷாந்த் அனுமோலுவை தான் மீனாட்சி காதலித்து வருவதாகவும், கூடிய விரைவில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தெலுங்கு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சுஷாந்த், அனுமோல் சத்யா பூஷண ராவ்வுக்கும் – நாக சுசீலா அக்னிக்கும் பிறந்தவர் ஆவார். நாக சுஷீலா நாகர்ஜூனாவின் சகோதரி. தெலுங்கு திரையுலகில் நிலையான ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க போராடி வரும் சுஷாந்த் நடிப்பில் கடைசியாக போலா ஷங்கர் திரைப்படம் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நாகார்ஜுனா திருமணம் முடிந்த கையேடு, இவர்களுடைய திருமண செய்தி வெளியாகும் என கூறப்படும் நிலையில்… இந்த காதல் விவகாரம் குறித்து இதுவரை சுஷாந்த் மற்றும் மீனாட்சி சவுத்திரி ஆகியோர் வாய் திறக்காமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.