மதிஷா பத்திரன இலங்கை அணிக்கு பெரும் சொத்து!! தோனி விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரன டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டிய வீரர் அல்ல என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து வெளியிடுகையில்,
“நான் தனிப்பட்ட முறையில் அவர் நிறைய சிவப்பு-பந்து போட்டிகளில் விளையாடக்கூடாது என்று நினைக்கிறேன். அவர் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் கூட, அவர் 50-பந்து வடிவத்தில் முடிந்தவரை குறைவாக விளையாட வேண்டும். அவர் மிகவும் வித்தியாசமான நபர் ஆவார்.
முக்கியமான தருணங்களில் அவரை எப்போதும் பயன்படுத்த முடியும். ஆனால் அவர் அனைத்து ஐசிசி போட்டிகளுக்கும் தகுதியானவர் என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர் இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார்.”
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று (06) இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
இலங்கையின் மத்திஷா பத்திரன 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், தனது நான்கு ஓவர்களில் எதிரணியால் 15 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்கள் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மத்திஷ பத்திரன வென்றதுடன், இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஆட்ட நாயகன் விருதை வென்ற இளம் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.