பதறிப்போன நடிகை மான்யா ஆனந்த்…. என்ன செய்தார் தெரியுமா?
சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் கூறிய தகவல் தான் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய பேட்டி தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை கவனித்த மான்யா ஆனந்த், உடனே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில்,
“என்னைப் பற்றிய பேட்டியைத் தொடர்ந்து சில சேனல்கள் தனுஷ் சாரை குறைசொல்லும் விதமாக போலித் தகவல்களை பரப்பு வருகிறார்கள். நான் பேட்டியில் தெளிவாக ‘என்னை தொடர்பு கொண்ட நபர் ஒரு போலி நபராக இருக்கலாம்’ என்று சொல்லியிருந்தேன். நான் ஒருபோதும் ‘அவர் தனுஷின் அதிகாரப்பூர்வ மேலாளர்’ என்று கூறவில்லை.
என்னை அழைத்த நபரின் எண்ணை தனுஷ் சாரின் குழுவுடன் பகிர்ந்து அவர்களுக்கு நன்கு தெரியப்படுத்துவேன். அவர் பெயரை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
எனவே, தயவுசெய்து யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். உண்மை தெரியாமல் யாரையும் குறைசொல்லுவது தவறு” என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக மான்யா ஆனந்த் கொடுத்த பேட்டியில், “தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் என்கிற பெயரில் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு தவறாக பேசினார், அவர் உண்மையில் தனுஷின் மேலாளரா அல்லது போலி நபரா என எனக்கு தெரியவில்லை. கதை ஒன்று இருக்கு. தனுஷ் கூப்பிட்டாலும் வரமாட்டீர்களா?” என்று அந்த நபர் கேட்டதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.






