நீலாங்கரை விஜய் வீட்டிற்கு அருகே மனோஜின் இறுதிச் சடங்குகள்…

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று அதாவது மார்ச் 25ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது, 48.
ஏற்கனவே இருதய நோய் மனோஜ்க்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது 48 வது வயதில் காலமானது திரைத்துறையினர் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இப்படியான நிலையில் இவரது இறுதிச் சடங்குகள் நீலாங்கரையில், நடிகர் விஜய் வீட்டிற்கு அருகே உள்ள, பாரதிராஜாவின் வீட்டில் நடைபெற உள்ளது.
திரையுலகில் பலரும் பாரதிராஜாவை நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல அவரது வீட்டுக்குச் சென்று கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் என்பது, சென்னை, நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரன் நகரில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் நடைபெற உள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாரதிராஜாவின் வீட்டிற்கு அருகே நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.