ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவிய மணி…

விஜய் டி.வி தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக பல ரசிகர்களால் அதிகம் பார்த்து, ரசிக்கப்பட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
கடந்த ஆண்டு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெறுமா? என மிகப்பெரிய சந்தேகம் இருந்த நிலையில் பின்னர் ஒருவழியாக ஒரு சில மாற்றங்களுடன் துவங்கப்பட்டது .
முதல் சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரில் இருந்து வெங்கடேஷ் பட் விலக, அவருக்கு பதிலாக மதம்பட்டி ரங்கராஜன் நடுவராக உள்ளே வந்தார்.
ஒரு சில கோமாளிகள், விஜய் டிவியில் இருந்து அதிரடியாக சன் டிவியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருந்த ‘டாப் குக்கு டூப்பு குக்கு’ நிகழ்ச்சிக்கு சென்றனர்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், ஷிவாங்கி குக்காக மாறியதால்… மணிமேகலை கோமாளியாக இருந்துவிட்டு சில வாரங்களிலேயே விலகினார். ஆனால் இதற்கான சரியான காரணத்தை அவர் கூறவில்லை. இதை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை, ரக்ஷனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.
ஆரம்பத்தில் இருந்தே அசத்தலாக இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் செமி ஃபைனல் நடந்த போது, மணிமேகலையிடம் பிரியங்கா தன்னை ஒரு சிறந்த தொகுப்பாளினி என்பதை வெளிப்படுத்த மணிமேகலை மீது தொடர்ந்து சில விமர்சனங்களை வைத்ததால், இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக மணிமேகலை போட்ட பதிவில் தெரிவித்து குக் வித கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார் மணிமேகலை.
ஆனால் அந்த போட்டியாளரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவர் சொன்னது பிரியங்காவை தான் என பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையானதோடு பிரியங்காவை விமர்சிக்கவும் வைத்தது. மற்ற குக் வித் கோமாளி போட்டியாளர்கள், இருவரையும் விட்டு கொடுக்காமல் பேசி வந்தனர். இந்நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் இருந்து ஒரேயடியாக விலகி வேறு ஒரு சேனலுக்கு தாவியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தான் மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளாராம். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் தொகுப்பாளர் விஜய் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் அடுத்து துவங்க உள்ள சீசனை விஜயுடன் சேர்ந்து, மணிமேகலையும் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.