ஆஸ்திரேலியாவில் 98 கங்காருக்களை சுட்டுக் கொன்ற நபர்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 98 கங்காருக்களைச் சுட்டுக் கொன்றதாக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் 43 வயது Joey Pace அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அவருடைய வழக்கு விசாரணை ஆகஸ்ட் 26ஆம் திகதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அது வரை Pace பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேஸுக்கு எதிரான ஆதாரங்களைக் பொலிஸார் மே முதலாம் திகதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பேஸின் வீட்டைக் பொலிஸார் அதிகாரிகள் சோதனை செய்தபோது அங்கு 3 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் ராணுவ முகாமில் கங்காருக்கள் மாண்டுக்கிடக்கக் காணப்பட்டன.
(Visited 20 times, 1 visits today)