யாழில் அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர்
யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ். நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தன்னுடன் வாக்குவாதப்பட்டு, தன்னை பீங்கானால் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபரே தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
சம்பவம் நொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





