இந்தியா

குளிர்சாதன வசதியில் கோளாறு… மயங்கி விழுந்த பயணிகள்: மன்னிப்பு கோரிய இண்டிகோ

இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் குளிர்சாதன வசதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர்.

வியாழக்கிழமை அன்று டெல்லியில் இருந்து அந்த விமானம் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. அப்போது குளிர்சாதனம் இயங்காததால் பயணிகள் அமரும் பகுதியில் கடும் வெப்பம் நிலவியது. இதனால் பல பயணிகள் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள காணொளிப் பதிவு ஒன்றில், பல பயணிகள் விமானத்தில் இருந்த பத்திரிகைகளைக் கொண்டு விசிறிக்கொள்வதும், சில பயணிகள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மன்னிப்பு கோருவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமானப் பணியாளர்கள் உரிய உதவிகளைச் செய்ததாகவும் அந்நிறுவனம் கூறியது.

கடந்த ஜூன் மாதமும், டெல்லியில் இருந்து பக்டோக்ரா சென்ற இண்டிகோ விமானத்தில் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டது.அச்சமயம் விமானத்தில் இருந்த முதியவர்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர். சில பயணிகள் தாங்கள் கடத்தப்பட்டதைப் போன்று உணர்வதாகவும் கோபப்பட்டனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே