ஈரான் தூதுவரை சந்தித்த மைத்திரி
இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஈரான் தூதரகத்தில் நேற்று (25) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மேலும் ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.





