பொழுதுபோக்கு

சீனாவில் சீன மொழியில் வெளியாகின்றது ‘மகாராஜா’

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் வரும் 29ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.

இதன் எதிரொலியால், படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகின்ற 29ம் தேதி வெளியிடவுள்ளனர். இந்தப் படத்தை அலிபாபா குழுமம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content