“டியூட் மீது கேஸ் போடுங்க” இளையராஜாவுக்கு நீதிமன்றம் கொடுத்த டிப்ஸ்

இசைஞானி இளையராஜா என்றால் பாடல்களின் ராஜா என்று கூறுவதை விட சர்ச்சைகளின் ராஜா என்று கூறலாம்.
இவருடைய பாடல்கள் எந்த படத்தில் பயன்படுத்தியிருந்தாலும் படம் வெளியாகி அடுத்த நாளே வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிடுவார் இளையராஜா.
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தி இருப்பதாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதனால் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் குட் பேட் அக்லீ ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டு அதன் பின் மாற்றங்களுடன் மீண்டும் வெளியானது.
சோனி நிறுவனத்திடம் குட் பேட் அக்லீ தயாரிப்பாளர் அனுமதி வாங்கி இருந்த நிலையில் தற்போது வழக்கு இளையராஜா vs சோனி நிறுவனம் இடையே தான் நடந்து வருகிறது.
இந்த நிலையில், சோனிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இளையராஜா தரப்பு “டியூட் படத்தில் கூட இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது” என குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
அதை கேட்ட நீதிபதி அதற்கு தனியாக வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.
இது ஒன்று போதுமே. இதனால் விரைவில் டியூட் படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர்வார் இளையராஜா என எதிர்பார்க்கப்படுகிறது.