மீண்டும் முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் : புயலை கிளப்பும் புகைப்படம்

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் முடிந்துவிட்டதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனவே முதல் மனைவியை ரங்கராஜ் பிரிந்துவிட்டார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இந்தச் சூழலில் முதல் மனைவி ஸ்ருதியுடன் ஜோடியாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
கோவை மாவட்டம் மாதம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது தந்தை பிரபல சமையல் கலைஞராக திகழ்ந்தவர். அதனைத் தொடர்ந்து பொறியியல் படித்த ரங்கராஜ் தனது அப்பா வழியிலேயே பயணம் செய்தார்.
மேலும் ஸ்ருதி என்ப்வரை திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களுக்கு தந்தையாகவும் இருக்கிறார்.
சமையல் மூலம் மட்டுமே ஃபேமஸ் ஆகி வந்த அவருக்கு; மெஹந்தி சர்க்கஸ் படம் ஹீரோவாகும் வாய்ப்பை கொடுத்தது. படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்துக்கு பிறகு எதிலும் நடிக்கவில்லை.
மாறாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். அவருக்கு அந்த நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டா பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
இவர் வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியவர். மேலும் பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜெ.ஜெ.ஃப்ரெட்ரிக் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் இரண்டு பேருக்கும் ஒத்து வராததால் அவர்கள் திருமண உறவிலிருந்து வெளியே வந்தார்கள். பிறகு ரங்கராஜுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியிருக்கிறது என்றும் பேச்சு ஓடியது.
இப்படிப்பட்ட நிலைமையில்தான் ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டு புகைப்படம் வெளியிட்டார். மேலும் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் அறிவித்தார்.
முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே எப்படி இவர் இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு ரங்கராஜ் இப்போதுவரை அமைதியாகவே இருக்கிறார்.
முதல் மனைவி ஸ்ருதியும் இதுதொடர்பாக எதுவும் பேசவில்லை. இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதியுடன் வந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
அவருடன் ஜோடியாக வந்தாலும் அவரிடம் நிகழ்ச்சி முடியும்வரைக்கும் அன்போடும், முகம் கொடுத்தும் அவர் பேசவில்லை என்றே தெரிகிறது. அதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகியிருக்கின்றன.
இதனைப் பார்த்த ரசிகர்களோ ரங்கராஜ் என்ன மைண்ட்செட்டில்தான் இருக்கிறார். இரண்டாவது திருமண சர்ச்சை குறித்து விளக்கமே அளிக்காத நிலையில் முதல் மனைவியும் வந்திருக்கிறார்.
அப்போ இரண்டாவது மனைவியின் நிலைமை என்ன?; அவரை சுற்றி என்னதான் நடக்கிறது. என்ன பிளானில்தான் இருக்கிறார் என கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.