“குழந்தைக்கு நான் தான் அப்பா” உண்மையை ஒப்புக்கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்
																																		மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரத்திற்கு ஒரு முடிவு இல்லையா? என புலம்பிக்கொண்டு இருந்தவர்களுக்கு இன்று ஒரு பதில் கிடைத்துவிட்டது.
மகளிர் ஆணையத்தின் விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ், “ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்து திருமணம் செய்ததாகவும், குழந்தைக்கு நானே அப்பா” என்றும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த தகவலை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா இவர்களுக்கு இடையே இருந்த உறவு குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
சமீபத்தில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அவர், குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து பல தகவல்களையும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்து இருந்தார்.
தற்போது குழந்தைக்கு “Ragha Rangaraj” (ரகா ரங்கராஜ்) என்று பெயரிட்டிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்தப் பிரச்சனை இன்று மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு வந்த போது, விசாரணையின் முடிவை ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில், எனது முன்னாள் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், இந்தக் குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்” என்றுத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ரங்கராஜ், ஆணையத்தின் முன் “குழந்தையின் தந்தை நான் தான்” என்று ஒப்புக்கொண்டதால், “இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்; நீதி நிலைநாட்டப்படும்” என்ற நம்பிக்கையுடன் “#justice will prevail” என்ற ஹேஷ்டேக்கையும் ஜாய் கிரிஸில்டா இணைத்துள்ளார்.
நீண்ட நாட்களாக போராடிய ஜாய் கிரிஸில்டாவுக்கு, இந்த ஒப்புதல் ஒரு பெரிய திருப்புமுனையையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.

மகளிர் ஆணையத்தின் விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ், “ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்துத் திருமணம் செய்ததாகவும், குழந்தை தனக்குத்தான் சொந்தம்” என்றும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்த தகவலை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா இவர்களுக்கு இடையே இருந்த உறவு குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
சமீபத்தில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அவர், குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து பல தகவல்களையும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்து இருந்தார்.
தற்போது குழந்தைக்கு “Ragha Rangaraj” (ரகா ரங்கராஜ்) என்று பெயரிட்டிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்தப் பிரச்சனை இன்று மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு வந்த போது, விசாரணையின் முடிவை ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டிருக்கிறார்.