மற்றுமொரு தொடருக்கும் முடிவு கட்டியது ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிக நீண்ட நாட்களாகவும் விருவிருப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வந்த மாரி தொடர் 1068 எபிசோடுகளுடன் முடிவடைந்தது.
மூடநம்பிக்கைகளையும் அமானுஷ்ய காட்சிகளையும் தெய்வ சக்தியையும் ஒன்றிணைத்து எடுக்கப்பட்ட மாரி தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது.
மாரி தொடரின் முதல் பாகம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்து, இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில், இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் கடந்த வார இறுதியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு தொடர் முடிவடைந்தது.
இதேவேளை, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நினைத்தாலே இனிக்கும் தொடரும் 1417 எபிசோடுகளுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)





