கமலிடம் காதலை சொல்லப் போன லட்சுமி ராமகிருஷ்ணன்… இறுதியில் நடந்த டுவிஸ்ட்

கரு பழனியப்பன் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அப்படத்தில் சினேகாவின் தாயாக நடித்திருந்தார் லட்சுமி.
இதையடுத்து மிஷ்கினின் யுத்தம் செய், சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள், சுசீந்திரனின் நான் மகான் அல்ல என தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் அம்மா வேடங்களில் நடித்து புகழ்பெற்ற இவர், கடந்த 2012-ம் ஆண்டு ஆரோகணம் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
பின்னர் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர், ஆர் யூ ஓகே பேபி போன்ற திரைப்படங்களையும் அவர் இயக்கினார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்கிற ரியாலிட்டி ஷோவை நடத்தினார். குடும்பப் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியான இதில் நடுவராக இருந்து மத்தியஸ்தம் செய்துவைத்து வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
அவர் சினிமாவில் நடித்து பாப்புலரானதை விட இந்நிகழ்ச்சியை நடத்தி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். மேலும் இந்நிகழ்ச்சியில் அவர் பேசிய என்னம்மா இப்படி பண்றீங்களே மா என்கிற வசனம் இன்றளவும் மீம் டெம்பிளேட்டாக இருந்து வருகிறது. அந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக 1500 எபிசோடுகள் தொகுத்து வழங்கினார்.
தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு 60 வயது ஆகிறது. இந்த வயதிலும் குக் வித் கோமாளி என்கிற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
அதில் சக போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுத்து வருகிறார். இவரின் கேரளா சமையலுக்கு அங்குள்ள நடுவர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
வார வாரம் வித்தியாசமாக சமைத்து அசத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த சீசனில் பைனலிஸ்டாக இருப்பார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது தான் கமலை காதலித்த கதையை கூறி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். கல்லூரி நாட்களில் இருந்தே கமல்ஹாசனை காதலித்ததாகவும், ஒருமுறை அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, அவரிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்கிற ஐடியாவில் அவரை சந்திக்க சென்றிருக்கிறார் லட்சுமி, ஆனால் அவர் காதலை சொல்லும்முன் கமல் அவரை தங்கச்சி என அழைத்துவிட்டாராம்.
அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தையால் அவரிடம் காதலை சொல்லாமல் தன் காதல் கோட்டையை தகர்த்துக் கொண்டு அங்கிருந்து திரும்பி வந்துவிட்டாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.