இலங்கை

குருநாகல் பகுதியில் காட்டை பற்ற வைத்த காதலர்கள்!

குருநாகல் அத்துகல மலையைப் பார்க்கச் சென்ற காதலர்கள் குறித்த காட்டை தீயிட்டு கொழுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பற்ற வைத்த தீக் குச்சியால் குறித்த அனர்தம் நேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட காதலர்கள் இருவரும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (19.08) உத்தரவிட்டுள்ளது.

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதுகல மலை உச்சியில் உள்ள புத்தர் சிலையை பார்வையிடுவதற்காக தம்பதியினர் இன்று காலை வந்துள்ளனர். இதன்போது குறித்த யுவதி தீ குச்சை பற்ற வைத்து காட்டின் இருபகுதியிலும் வீசியுள்ளார்.

இதனைபார்த்த மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பிரதேசத்தில் வசிக்கின்றனர். குறித்த இளைஞர் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்