பிலிப்பைன்ஸில் 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லொறி : 09 பேர் பலி!
பிலிப்பைன்ஸில் மலைப்பாதையில் பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 09 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீக்ரோஸ் ஓரியண்டல் (Negros Oriental) மாகாணத்தில் உள்ள பயாவன் (Bayawan) நகரில் கச்சா எண்ணெயை விநியோகித்துவிட்டு மீள திரும்பும்போது விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பொலிஸார் அறிவித்துள்ளனர்.




