வசூல் நாயகன் லோகேஷ் கைவசம் உள்ள 4 படங்கள்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் கூலி படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து கல்லாகட்டி வருவதால் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளது.
கூலி வெற்றியை தொடர்ந்து கதாநாயகனாக லோகேஷ் இறங்க இருக்கிறார். அதன்படி சாணி காகிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கதையில் லோகேஷ் நடிக்க இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையில் உருவாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து கைதி 2 படத்தை அடுத்ததாக லோகேஷ் எடுக்க இருக்கிறார். இதில் கார்த்தி மற்றும் சூர்யா இருவருமே நடிக்க இருக்கிறார்கள். சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
அடுத்ததாக கூலி படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருந்தார். லோகேஷின் டைரக்ஷன் அமீர்கானுக்கு பிடித்துப் போன நிலையில் அவரது படத்தில் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக அமீர்கான் படத்தையும் லோகேஷ் இயக்கம் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ரஜினி, கமல் இருவரையும் சந்தித்து ஒரு கதை கூறி இருக்கிறார். இந்தப் படம் பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை கமலின் ராஜ் கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இவ்வாறு லோகேஷுக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய ப்ராஜெக்ட் இருக்கிறது. ஆகையால் அடுத்த மூன்று வருடங்களுக்கு லோகேஷ் செம பிசியாக இருக்க உள்ளார்.