படமாகும் ரஜினியின் வாழ்க்கை… லோகேஷ் பிளான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒருவராவார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பின்போது, அவர் தன் வாழ்க்கை வரலாற்றை தினமும் எழுதிக் கொண்டிருந்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
“எந்த எபிசோட்ல இருக்கீங்க?” என தானே கேட்பதும், ரஜினியின் பதில்கள் தன்னை உற்சாகப்படுத்தியதையும் அவர் கூறினார்.
ரஜினிகாந்த் தன் 42வது வயதில் நடந்த அனுபவங்களைப் பகிர்ந்ததும், யாரிடமும் சொல்லாத விஷயங்களை தன்னிடம் சொன்னதும், லோகேஷுக்கு நினைவில் நிறைந்த அனுபவமாக இருந்தது. அவர் கடந்து வந்த தடைகள் தான் நம்மை அவருடன் உணர்வுபூர்வமாக இணைக்கிறது என லோகேஷ் உணர்வுடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், புகழ்பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அவர்களின் இளைய பருவத்திற்காக, நடிகர் தனுஷ் மிகவும் பொருத்தமான தேர்வாக இருப்பார் என அவர் கூறுகிறார். இளம் வயதில் ரஜினியின் தோற்றம், நடையில் தனுஷ் ஒருவேளை அசால்டாக மீட்டெடுக்க கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
90களின் ரஜினி தோற்றத்திற்கு வேறு நடிகர்கள் பற்றி கருத்து தெரிவிக்கிறார் லோகேஷ். அந்த காலத்திற்கான தோற்றத்திற்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி சிறந்த தேர்வாக இருப்பார்கள் எனக் கூறுகிறார். இவர்களின் நடிப்பு திறனும், ரசிகர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கும் முக்கிய காரணமாகும்.
இவர்கள் மூவரும் தமிழ் சினிமாவின் நவீன தூண்களாக திகழ்கின்றனர். தங்கள் சுயதிறமை, குரல், உடல் மொழி, ரசிகர்களிடையேயான செல்வாக்கு ஆகியவற்றால் ரஜினியின் பல பருவங்களையும் சாத்தியமாக உயிர்ப்பிக்கக்கூடியவர்கள். இயக்குனர் லோகேஷின் கைவசம் இந்த யோசனை இருந்தால், அது ஏற்கனவே வெற்றிப் பாதையில் நகர்கிறது என்பதே உண்மை.
ரஜினியின் வாழ்க்கையை உலகுக்கு காட்டும் இந்த திரைப்படம், ஒரு வாழ்க்கையின் பயணத்தை மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வளர்ச்சியையும் பிரதிபலிக்க போகிறது. ஒரு மனிதர் எப்படி மிக சாதாரண வாழ்க்கையில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆனார் என்பதை படமாக காணும் தருணத்தை உலகமே எதிர்பார்கிறது.