ஹீரோவாக லோகி…!! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
நடிகர்கள் இயக்குனர்களாவதும், இயக்குனர்கள் நடிகர்களாவதும் பெரிய விடயமல்ல. இது தற்போதைய சினிமாவில் ட்ரென்டிங் ஆகி விட்டது.
இன்றைய மாஸ் இயக்குனாக இருக்கும் லோகேஷ் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இதில் அவரது சம்பள விவரங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த படத்தில் வாமிகா கபி அவருக்கு ஹீரோயினாக இணைந்து நடிக்கிறார். ஆக்ஷன் காதல் கதையாக உருவாகும் இந்த படம், ஒரு டைட்டில் டீசருடன் அறிவிக்கப்பட்டது.

அனிருத் இசையமைக்க முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம், 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு 35 கோடி சம்பளமாக வழங்க சன் பிக்சர்ஸ் முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநராக கூலி படத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கினார் லோகேஷ் கனகராஜ். தற்போது ஹீரோவாக ஒரு படத்துக்கு 35 கோடியை சம்பளமாக வாங்குகின்றார் நம்ம லோகி.






