அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக லோகேஷ்…

தமிழ் சினிமாவில் இப்போது இளம் இயக்குனர்களின் ராஜ்ஜியம் நடக்கிறது என்றே கூறலாம்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களின் புதிய படங்களை இளம் இயக்குனர்கள் இயக்கி வெற்றியும் கண்டு வருகிறார்கள்.
சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிப்பில் தயாராகியுள்ள கூலி படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இயக்குனராக தன்னை நிரூபித்து வரும் லோகேஷ் கனகராஜ் இப்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். தனுஷின் கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் லோகேஷ் புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த புதிய கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.