பிரான்ஸில் வளர்ப்பு நாயால் சிறுவனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் வளர்ப்பு நாய் ஒன்று 11 வயதுடைய சிறுவனை கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிருக்காபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் தனது குடும்பத்தினருடன் அவரது நண்பனின் குடும்ப நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது, நண்பனின் வளர்ப்பு நாய் கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷமாக சிறுவனைக் கடித்து குதறியுள்ளது.
சிறுவனின் முகத்தில் பாய்ந்து கடித்து சதையை பிய்த்து எடுத்துள்ளது. சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
(Visited 14 times, 1 visits today)