உலகம்

ஈரானுக்கு முடிவு கட்டுவோம்! கூட்டு தாக்குதல் தொடரும் என்கிறார் ட்ரம்ப்!!

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஆயுதக் கிடங்கு விரைவாக அழிக்கப்பட்டு வருகிறது. கூட்டு வான் வழி தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார்.

“ நாம் இப்போது மிகவும் வலுவான நிலையில் இருக்கிறோம். ஈரானின் தலைமை வேகமாக சிதறி வருகிறது.

கெட்டவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் போது கெட்ட விடயங்களே நடக்கும். அதனால்தான் அழிக்கின்றோம்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதற்ற நிலை உக்கிரமடைந்துவருகின்றது . இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து ஈரான்மீது ஆறாவது நாளாக இன்று தாக்குதல் நடத்திவருகின்றன.

ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்படி தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து லெபனான்மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.

ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில் பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரசு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

ஈரான் தாக்குதலில் 6 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!