பொழுதுபோக்கு

விஜய் ஏன் கல்யாண மண்டபத்தை விற்கனும்? லியோ படம் படு தோல்வி?

விஜயின் லியோ படம் வெளியாகி ஓராண்டாகி உள்ள நிலையில் பிரபல சினிமா விமர்சகர்கள் லியோ படம் தோல்வி என்று கூறி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் பட வெற்றிக்குப் பின் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்த படம் லியோ. இப்படம் இதுவரை விஜய் படத்திற்கு இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து, ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் ஆச்சர்யபட வைத்தது.

விஜயுடன் இணைந்து இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் இப்படத்தை லலித்குமார் பிரமாண்டமாக தயாரித்திருந்தார்.

ரூ.300 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்ததாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இப்படம் பாக்ஸ் ஆப்ஸில் ரூ.620 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு ஆன நிலையில் இப்படத்தின் நினைவுகள் பற்றி லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இப்படத்தில் இணைந்து பணியாற்றியவர்களும், ரசிகர்களும் அனுபவத்தை பகிர்ந்து வந்தனர்.

See also  இலங்கையில் ஒரு நைட்டுக்கு 70,000 ரூபாயை காலி பண்ணிய பூஜா ஹெக்டே

இந்த நிலையில், லியோ படம் எதிர்பார்த்த அளவு இல்லை, அது பல விமர்சனங்களை உள்ளடக்கிய தோல்விப் படம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

பிரபல சினிமா விமர்சகர் ஒருவர், ’’லியோ படம் இத்தனை கோடி வசூலித்தது என்றால் ஏன் விஜய் சென்னையில் உள்ள தனது கலியாண மண்டபத்தை லியோ பட தயாரிப்பாளர் லலித்குமாருக்கு கொடுக்க வேண்டும்? லியோ படத்தில் போதிய லாபமில்லை.

அதனால்தான் விஜய் இப்படத்தின் நஷ்டத்திற்கு ஈடுகட்ட லலித்திற்கு மண்டபத்தை கொடுத்திருக்கிறார். மேலும், லியோ படம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக பரவலாக பேசப்பட்டது. இப்படத்திற்கு ஆயிரம் காரணம் கூறினாலும் ஸ்கிரிப்ட் என்னாச்சு? அதுலதான் இருக்கனும் ’’என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content