லெபனான் நாட்டில் நெகிழ்ச்சி சம்பவம் – கைவிடப்பட்ட குழந்தையை காப்பாற்றிய தெருநாய்

லெபனானின் Tripoli நகரில் குப்பைப் பையில் கைவிடப்பட்ட குழந்தை ஒன்று காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தெருநாய் ஒன்றே குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று காப்பாற்றியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு 4 மாதங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. வழிப்போக்கர் ஒருவர் குழந்தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு அதை மருத்துவமனையில் சேர்க்க நாய் உதவியுள்ளது.
சமூக வளைத்தளங்களில் பகிரப்படும் குழந்தையின் படங்களில் அதன் முகத்தில் சிவப்பு நிறக் காயங்கள் தெரிகின்றன. அதைக் கண்ட பலர் கவலை தெரிவித்தனர்.
அந்தச் சம்பவம் அங்குள்ள மக்களுக்குச் கோபத்தை ஏற்படுத்தியுள்ளடன் சிலர் குழந்தையைத் தத்தெடுக்க முன்வந்துள்ளார்.
(Visited 16 times, 1 visits today)