ஐரோப்பா

லண்டனில் ஒன்றுக்கூடும் 06 பால்கன் நாடுகளின் தலைவர்கள்!

06  பால்கன் (Balkan ) நாடுகளின் தலைவர்கள் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கவுள்ளனர்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக 2014 இல் தொடங்கப்பட்ட உச்சிமாநாடு  லண்டனில்  நடைபெறுகிறது.

2020 ஆம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய போதிலும் வருடாந்த உச்சிமாநாட்டை நடத்துகிறது.

இதில் கலந்துகொள்வதற்காக  அல்பேனியா (Albania), போஸ்னியா(Bosnia), கொசோவோ(Kosovo), மாண்டினீக்ரோ (Montenegro), வடக்கு மாசிடோனியா (North Macedonia) மற்றும் செர்பியா(Serbia) ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த ஒரே ஒரு  பால்கன் நாடு குரோஷியா (Croatia) ஆகும்.

இந்நிலையில் ரஷ்யாவின் தலையீடு, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பால்கன் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பேச்சுவார்தைகளின்போது மற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்