சுந்தர் சி விலகியது ஏன்? லதா ரஜினிகாந்த் ஓபன் டாக்
சுந்தர்.சி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளிவந்து சில நாட்களுக்குள் சுந்தர் சி திடீரென இப்படத்திலிருந்து விலகினார்.
இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறிய விடயம் தான் தற்போது ஹைலைட்.
“அது அவருடைய தொழில் சம்பந்தப்பட்ட விஷயம். அதைப் பற்றி நான் கூற விரும்பவில்லை” என்றார்.

கோவாவில் நடை பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சென்னையில் இருந்து கோவாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். அப்போது விமான நிலையத்தில் பேசிய லதா ரஜினிகாந்த் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், “அனைத்து நாடுகளைச் சார்ந்த நடிகர்களும் இருக்கும் ஒரு நிகழ்ச்சியில், மிகப்பெரிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதை கௌரமாக நினைக்கிறேன். மத்திய அரசிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.






