சூர்யாவுடன் இணையும் அயலான் இயக்குநர்… மெகா பட்ஜெட்டில் மற்றுமொரு படம் தயார்
சூர்யாவின் கங்குவா இந்தாண்டு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா 43, வாடிவாசல் படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா. அதன் பின்னர் அவரது புதிய படத்தை அயலான் இயக்குநர் ரவிக்குமார் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
இன்று நேற்று நாளை, அயலான் படங்கள் வரிசையில் இதுவும் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தின் ஷூட்டிங் பொங்கலுக்குப் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்குகிறது.
இந்த நிலையில் தான் சூர்யாவை சந்தித்து ஒரு சயின்ஸ் பிக்ஷன் ஜானர் கதையை கூறியுள்ளார் ரவிக்குமார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக சூர்யாவும் கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.
இந்தப் படத்தையும் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இயக்கவுள்ள ரவிக்குமார், அபோகாலிப்டிக் பின்னணியில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னரும் சூர்யா 24 என்ற சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.