தெற்கு அதிவேக பாதையில் மண்சரிவு!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால், அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நான்கு அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில், பின்னதுவ மற்றும் இமதுவக்கு இடைப்பட்ட 102 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் வீதியின் இருபுறமும் உள்ள மலைகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த மலைப்பகுதிகளில் அதிகம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





